’நீட்’ தேர்வில் தேறிய நவோதயா மாணவர்கள் 11875 பேர்: தமிழிசை தகவல்
நவோதயா பள்ளிகளை ஆரம்பிக்க மாவட்டம் தோறும் 30 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தர வேண்டும் என நீதி மன்றம் சில தினம் முன்பு உத்தரவிட்டது.
இந்தப் பள்ளிகள் வந்தால் இந்தி திணிப்பு அதிகரித்துவிடும் ஆகவே தமிழக அரசு அனுமதிக்க கூடாது என கூறி தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல்
கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஒரு புள்ளி விவரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தொடங்க உள்ள நவோதயா பள்ளிகளுக்காக மத்திய அரசு 20 கோடி நிதி உதவி வழங்கும் என்றும் நவோதயாவில் நீட் எழுதிய 14183 பேரில் 11875
பேர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்றும் கூறியிருக்கிறார். அதோடு எதிர்க்கட்சிகளை நோக்கி தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 5 பேர் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளனர். இந்த நிலை ஏன்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.