தேனியில் வீட்டில் பிரசவம் ! மாமனார் கைது

தேனியில் வீட்டில் பிரசவம் ! மாமனார் கைது

தேனியில் வீட்டில் பிரசவம் ! மாமனார் கைது
Published on

மருத்துவர் இன்றி பிரசவம் பார்க்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், தேனி அருகே கோடாங்கிபட்டியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்னுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததற்காக பெண்ணின் மாமனார்‌ கைது செய்யப்பட்டுள்ளார். 

தேனி அருகே கோடாங்கிபட்டியைச் சேர்ந்த கண்ணன் - மகாலட்சுமி தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பொறியியல் பட்டதாரியான கண்ணன் ஒப்பந்தம் வேலை செய்து வருகிறார். மகாலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று விரும்பி கண்ணன் மற்றும் மகாலட்சுமியும் இயற்க்கை மருத்துவம் முறையில் (சுகபிரசவம்) மீது ஆர்வம் கொண்டுள்ளனர். 

இதனிகிடையே மகாலட்சுமிக்கு மருத்துவர் தேதி குறித்து கொடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மகாலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையெடுத்து கண்ணன் தன் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். நேற்று காலை 5 மணியளவில் அவருக்கு அழகான ஆண்  குழந்தை பிறந்தது.  ஆனால் பிரசவம் முடிந்து குழந்தையின் தொப்புள் கொடியுடன் இணைந்துள்ள நச்சுக் கொடியை அகற்றாமல் வைத்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி மருத்துவத்துறைக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக்குழுவினர் அங்கு சென்றனர். ஆனால் கணவன்,மனைவி இருவரும் நச்சுக் கொடியை அகற்ற மருத்துவக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவ குழுவினர் அவர்களது வீட்டின் அருகிலேயே நாள் முழுவதும் காத்திருந்தனர். பின்பு மருத்துவகுழு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைதொடந்து காவல்துறை அதிகாரிகள் அவருடைய வீட்டுக்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையெடுத்து தாய் மற்றும் குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு காவல்துறையினரும், மருத்துவ அதிகாரிகளும் அறிவுறுத்தினர். பின் மருத்துவக் குழுவினர் உதவியுடன் குழந்தையை பரிசோதனை செய்து  டேம்புசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையையும் தாயையும் அனுமதித்தனர்.  மேலும் வீட்டில் நுழை‌ய வி‌டாமல் மருத்துவ அதிகாரிகளை தடுத்ததாகப் மருத்துவ அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் கணவர் கண்ணன், அவரது தந்தை தனுஷ்கோடி மற்றும் தாயார் அழகம்மாள் மீது வழக்கு பதிவு செய்தனர். பழனிசெட்டிபட்டி காவல்துறை பெண்ணின் மாமனார்‌ தனுஷ்கோடியை கைது  செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com