தேசிய அளவிலான மூத்தோர் விளையாட்டுப்போட்டி – 5 பதக்கங்களை வென்ற பெண் தலைமை காவலர்

தேசிய அளவிலான மூத்தோர் விளையாட்டுப்போட்டி – 5 பதக்கங்களை வென்ற பெண் தலைமை காவலர்

தேசிய அளவிலான மூத்தோர் விளையாட்டுப்போட்டி – 5 பதக்கங்களை வென்ற பெண் தலைமை காவலர்
Published on

தேசிய அளவிலான மூத்தோர் விளையாட்டுப் போட்டியில் 5 பதக்கங்களை வென்ற போலீஸ் பெண் தலைமை காவலர் தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள காவல் கரங்கள் மையத்தில் பணியாற்றி வருபவர் லீலா ஸ்ரீ. இவர், காவல் துறையில் வைக்கப்படும் மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களையும், கோப்பைகளை வென்று சாதனை புரிந்துள்ளார்.

இந்நிலையில் தேசிய அளவிலான இரண்டாவது மூத்தோர் விளையாட்டு போட்டிகள் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட 21 மாநிலங்கள். ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.

இந்த போட்டியில் காவல்துறை சார்பாக பங்கேற்ற லீலா ஸ்ரீ, 400 மீட்டர் ரிலே ரேஸில் தங்கமும், 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றார். அதேபோல் குண்டு எறிதலில் வெண்கல பதக்கமும், ஹாம்மர் த்ரோவில் வெண்கல பதக்கமும், மற்றும் 100 மீட்டர் ரிலே ரேஸில் வெள்ளிப் பதக்கம் என மொத்தம் ஐந்து பதக்கங்களை பெற்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com