”ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராகக் கூடாது?” - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா

”ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராகக் கூடாது?” - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா
”ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராகக் கூடாது?” - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நந்தனாத்தில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே, பரூக் அப்துல்லா, அகிலேஷ் மற்றும் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்றனர்.

சென்னை வந்துள்ள காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, ”எதிர்க்கட்சிகள் இணைந்து ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்வோம். பொருத்தமான, நாட்டை ஒருங்கிணைப்பவராக உள்ள ஒருவரை பிரதமராக தேர்வு செய்வோம். மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராகக் கூடாது? அவர் பிரதமர் வேட்பாளராவதில் என்ன தவறு இருக்க கூடும்?” என்று பேசினார்.

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, “2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும். யார் தலைமைத் தாங்குவது என்பது முக்கியமல்ல, ஒன்று சேர்ந்து அரசியலமைப்பை காப்பாற்ற முன்வரவேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com