தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தேசிய மனித உரிமை ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு நேரடியாக தூத்துக்குடி சென்று விசாரணை மேற்கொண்டது.
இந்த அறிக்கை வெளியிடப்படாத நிலையில் மீண்டும் விசாரிக்கக்கோரி, மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக பொதுத்துறை தாக்கல் செய்த மனுவில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில், 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், 84 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், விசாரணை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com