தமிழ்நாடு
அனல்மின் நிலையம் மூடப்படும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை!
அனல்மின் நிலையம் மூடப்படும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை!
வடசென்னை அனல்மின் நிலையத்தால் சாம்பல் கொட்டப்பட்ட இடங்களை ஒருவாரத்திற்குள் சுத்தப்படுத்தாவிட்டால், அனல்மின் நிலையம் மூடப்படும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.
அத்திப்பட்டில் செயல்படும் வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சாம்பல், பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலையாற்றில் கொட்டப்படுகிறது. அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதால், சாம்பல் கொட்டுவதை தடுக்கக் கோரி ரவிமாறன் என்பவர் தென்மண்டல பசுமை தீர்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். விசாரணையின் போது, சாம்பல் கொட்டப்பட்டுள்ள இடங்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டன. அதனைப் பார்த்துக் கோபமடைந்த நீதிபதிகள் 2 வாரத்திற்குள் சாம்பலை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். மீறினால் வடசென்னை அனல் மின்நிலையத்தின் 2 அலகுகளையும் மூட உத்தரவிடப்படும் என்றும் எச்சரித்தனர்.