நன்மங்கலம் காட்டில் சென்னை மெட்ரோ பணிகளை நிறுத்த ஆணை

நன்மங்கலம் காட்டில் சென்னை மெட்ரோ பணிகளை நிறுத்த ஆணை
நன்மங்கலம் காட்டில் சென்னை மெட்ரோ பணிகளை நிறுத்த ஆணை

வனத்துறையின் உரிய அனுமதி கிடைக்கும் வரை நன்மங்கலம் வனப்பகுதியில் பணிகளை நிறுத்திட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாதவரத்திலிருந்து நன்மங்கலம் வழியே சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயிலுக்கான வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதனால் நன்மங்கலத்தில் வாழும் இந்திய கழுகு என்றழைக்கப்படும் அரியவகை ஆந்தை உள்ளிட்ட 125 வகையான பறவைகளும் 500 வகையான தாவரங்களும் பாதிக்கப்படும் என ஊடகங்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, நன்மங்கலம் காப்புக் காட்டில் 1.56 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே பயன்படுத்த உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. வன உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு எந்த பாதிப்பும் நேரிடாத வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்பட்டு, வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. கூடுதல் விளக்கத்துடன் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டிருப்பதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நன்மங்கலம் வனப்பகுதியில் உள்ள உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில், அறிவியல் பூர்வமான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையாக இருக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வனத்துறையின் உரிய அனுமதி கிடைக்கும் வரை நன்மங்கலம் வனப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com