\
சென்னைக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் விரைவு

சென்னைக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் விரைவு

சென்னைக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் விரைவு
Published on

கனமழை எதிரொலியாக சென்னையில் மீட்புப் பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்த் தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 3 குழுக்கள் விரைந்துள்ளன.

சென்னையில் இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்தது. சில இடங்களில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி இருந்தது. இதனால் சென்னையின் பல இடங்களில் சாலைகளிலும், வீடுகளிலும் தண்ணீர் புகுந்து தேங்கியிருக்கிறது. ஏற்கெனவே மீட்புப்பணிகள் மாநகராட்சி சார்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 3 குழுக்கள் விரைந்துள்ளன. மீட்புப் பணிக்கு தேவையான அதிநவீன கருவிகளுடன் அரக்கோணத்தில் இருந்து மீட்புக்குழுவினர் புறப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com