மதுரையில் இரட்டைக் குவளை பயன்பாடு குறித்து ஆய்வு

மதுரையில் இரட்டைக் குவளை பயன்பாடு குறித்து ஆய்வு

மதுரையில் இரட்டைக் குவளை பயன்பாடு குறித்து ஆய்வு
Published on

மதுரை மாவட்டம் மருதங்குடியில் இரட்டைக் குவளை முறை பயன்பாடு குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு நடத்த உள்ளது.

இரட்டைக் குவளை முறை பயன்பாடு குறித்து ஆதாரத்தோடு புதிய தலைமுறை சமீபத்தில் அம்பலப்படுத்தியது. இதனை ஆதாரமாகக் கொண்டு மருதங்குடியில் நாளை மறுநாள் ஆய்வு நடத்தப்படும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அறிவித்துள்ளது. தீண்டாமை பிரச்னை குறித்த ஆதாரங்களோடு மதுரை மக்கள் ஆய்வுக்குழுவிடம் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரட்டைக் குவளை முறை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com