“நத்தமேடு கள்ளஓட்டுகள் தொடர்பாக வழக்கு தொடரப்படும்” - திமுக வேட்பாளர்
நத்தமேடு பகுதியில் பல விதிமீறல் நடந்துள்ளதால் மறுவாக்குப்பதிவு தேவை என திமுக எம்பி வேட்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
வேலூர் தவிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அத்துடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்ள நத்தமேடு பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பல அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திமுக உள்ளிட்ட கட்சியினர் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்யப்போவதாக தருமபுரி திமுக வேட்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
சுமார் 4000 வாக்குகளுக்கு மேல் கொண்ட பகுதியாகவும், 4 வாக்குசாவடிகளை கொண்டதாகவும் நத்தமேடு உள்ளது. இங்கு குறிப்பிட்ட சமூகத்தினர் மற சமூகத்தினரை வாக்களிக்கவிடாமல் தடுத்தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், ஒரு சிலர் நபர்கள் பலமுறை வாக்களித்து, கள்ள ஓட்டுகளை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.