\
சசிகலாவை அவதூறாக பேசியதாக நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மையை எரித்த அமமுகவினர்

சசிகலாவை அவதூறாக பேசியதாக நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மையை எரித்த அமமுகவினர்

சசிகலாவை அவதூறாக பேசியதாக நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மையை எரித்த அமமுகவினர்
Published on

பாளையங்கோட்டையில் சசிகலா பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கண்டித்து அவரது உருவபொம்மையை எரித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில், பாளையங்கோட்டை பகுதி கழக செயலாளர் ரமேஷ் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அதன்பிறகு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை பகுதி கழக செயலாளர் ரமேஷ் கூறும்போது, “சசிகலாவை பற்றிய நத்தம் விஸ்வநாதன் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம், தொடர்ந்து சசிகலா பற்றி இதுபோல அவதூறாக பேசினால் அவர், தமிழகத்தில் எந்த பகுதிக்கும் வரமுடியாது, குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும்போது அவருக்கு கருப்பு கொடி காட்டுவோம்” என்று தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com