நடராஜன் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

நடராஜன் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

நடராஜன் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
Published on

சென்னை‌ மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் ‌நடராஜன் தொ‌டர்ந்து தீவிர கண்காணிப்‌பில் உள்ளார். இத்தகவலை குளோபல் மருத்துவமனை நிர்வாக‌ம் தெரிவித்துள்ளது. அவரது உடல் நிலையில் படிப்படியாக முன்னேற்றம் தெரிவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடராஜனுக்கு தொண்டையில் டிரக்கியாஸ்‌‌டமி குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலம் செயற்கை சுவாசம் தரப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் இரண்டுமே மாற்றப்பட்டுள்ளதால் அவரது உடல் நிலை கவலைக்கிடம் என்ற அளவிலேயே ஒரு சில நாட்களுக்கு தொடரும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதனிடையே, பரோலில் சென்னை வந்துள்ள வி.கே.சசிகலா, பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது கணவர் நடராசனை காண இன்னும் சற்று நேரத்தில் புறப்படுகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com