ஐ.நா வழங்கும் சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருதுக்கு அரசு பள்ளியில் படிக்கும் நரிக்குறவர் வகுப்பைச் சேர்ந்த சக்தி என்ற 7ஆம் வகுப்பு மாணவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். கல்வி குறித்து தன் சமூக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால், ஐ.நாவின் விருதுக்கு இந்த மாணவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
விடுமுறை நாட்களில் ஊசி மணி விற்க செல்லும் அவர், தான் சந்திக்கும் தங்கள் சமூக குழந்தைகளிடம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி, அது குறித்து அவர்களது பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதனால் hand in hand எனும் தொண்டு நிறுவனம், ஐ.நாவின் சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருதுக்கு சக்தியை பரிந்துரைத்திருக்கிறது.

