Madras high court, EPS
Madras high court, EPSpt desk

போதைப் பொருள் கடத்தல் விவகாரம்| ஆர்எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு - இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

செய்தியாளர்: V.M.சுப்பையா

திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சமீபத்திய போதைப் பொருள் பறிமுதல், கைது தொடர்பாக திமுகவை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். மேலும் இது தொடர்பான விமர்சனங்களையும் திமுகவை தொடர்பு படுத்தி எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

EPS - R.S.Bharathi
EPS - R.S.Bharathipt desk

இவ்வாறு திமுக கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள் நோக்கதுடன் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக-வை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Madras high court, EPS
மநீம முதல் மாநாடு.. தலைவர் கமல்ஹாசன் சிறப்புரை.. பிறந்த தின சிறப்புப் பகிர்வு

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வழக்கறிஞர் மனுராஜ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜயநாரயாணன் ஆகியோர் ஆஜராகி வாதம் வைத்தனர். இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com