5ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை: நாராயணசாமி

5ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை: நாராயணசாமி
5ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை: நாராயணசாமி

புதுச்சேரியில் ரங்கசாமி கட்சியை உடைத்து பாஜக ஆட்சி அமைக்கும் வேலையில் இறங்கியுள்ளது என நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசம்போது...

5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மீதமுள்ள 3 லட்சம் கோடி ரூபாய் ஏன் அரசுக்கு வருவாய் வரவில்லை. இதற்கு பிரதமர் என்ன பதில் சொல்லப்போகிறார். தோராயமாக 3 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறும் பிரதமர் மோடி, இதில் சிபிஐ விசாரணை நடத்தத் தயாரா? 5 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும்.

புதுச்சேரி மாநில திட்டக்குழு கூட்டம் முடிந்து இந்தாண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் போட நிர்ணயம் செய்யப்பட்டது. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கும் கோப்பை, ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய அரசுக்கு அனுப்பியும் இதுவரை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதுவரை ஒப்புதல் பெறாத பட்ஜெட்டை எப்படி முதல்வர் ரங்கசாமி வரும் 10-ஆம் தேதி கூடவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்வார்.

காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு காலதாமதமாக்கியது. இது ரங்கசாமி ஆட்சியிலும் தொடர்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக உள்ள ரங்கசாமி, பட்ஜெட்டிற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யுமா? அதை ரங்கசாமிதான் கேட்டு பெறுவாரா? இதற்கு ரங்கசாமி பதில் சொல்லியாக வேண்டும்.

பீகாரை தொடர்ந்து புதுச்சேரியில் ரங்கசாமி கட்சியை உடைத்து பாஜக ஆட்சி அமைக்கும் வேலையில் இறங்கியுள்ளது. ரங்கசாமியை, மோடியும், அமித் ஷாவும், வீட்டுக்கு அனுப்பும் காலம் விரைவில் வரும். கூட்டணி கட்சியை குழித்தோண்டி புதைக்கும் வேலையை பாஜக செய்கிறது. அது புதுச்சேரியில் விரைவில் அரங்கேறும்" என நாராயணசாமி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com