தினகரனுக்கு எதிராக பாஜக சதி: நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் மிரட்டலுக்குப் பயந்து அமைச்சர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படப் போவதில்லை என அதிமுக அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’பாஜக மிரட்டலுக்கு அமைச்சர்கள் பணிந்துள்ளனர். பன்னீர்செல்வம் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட முடியாது. அமைச்சர்கள் சொல்வதை தொண்டர்கள் ஏற்க தயாராக இல்லை. தினகரன் பொலிவோடு கட்சியை வழிநடத்துவார். திராவிட இயக்க பூமியில் வகுப்புவாத சக்திகள் காலூன்ற வாய்ப்பில்லை. தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை போன்ற அதிகார மையங்களை பாஜக பயன்படுத்துகிறது. சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைக்க வேண்டும் எனும் அழுத்தம் சிலரால் கொடுக்கப்பட்டுள்ளது. டிடிவி.தினகரனுக்கு எதிராக பாஜகவினர் சதி செய்கின்றனர். இன்று நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் டிடிவி.தினகரன் நல்ல முடிவை எடுப்பார்’ என அவர் தெரிவித்தார்.