“என் மனைவி வாக்குவாதம் செய்தது தவறாக பரப்பப்படுகிறது” - நமிதா கணவர்

“என் மனைவி வாக்குவாதம் செய்தது தவறாக பரப்பப்படுகிறது” - நமிதா கணவர்
“என் மனைவி வாக்குவாதம் செய்தது தவறாக பரப்பப்படுகிறது” - நமிதா கணவர்

சேலம் அருகே நடிகை நமிதா பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தது தவறாக பரப்படுவதாக நமிதாவின் கணவர் விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சேலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம், காரில் வந்த நமிதா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட சிலர் வாக்குவதாம் செய்ததாக செய்திகள் பரவின. இதுதொடர்பாக நமிதாவின் கணவர் தற்போது விளக்கமளித்துள்ளார். 

அதில், “நாங்கள் ஏற்காட்டில் ஷீட்டிங்கை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்தோம். 3 இடங்களில் எங்களை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். இறுதியாக சேலத்தில் சில அதிகாரிகள் எங்களை சோதனை செய்தனர். அப்போது ஒரு அதிகாரி முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். எங்கள் காரின் பின்புற இருக்கையில் எனது மனைவி நமிதா தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த அதிகாரி காரின் பின் இருக்கை சோதனை செய்ய வேண்டும் என்றார். நான் எனது மனைவி ஓய்வெடுக்க தூங்கிறார், தேவை இருந்தால் சோதனை செய்யுங்கள் என்றேன். 

ஆனாலும் அவர் சோதனைக்காக பின்புற கதவை திறந்தார். அப்போது கதவில் சாய்ந்து உறங்கிய நமிதா காரின் வெளியே சாய்ந்தார். அதற்கு மன்னிப்பு கேட்ட அதிகாரி, தனது சோதனையை தொடர்ந்தார். பின்னர், நமிதாவின் கைப்பையை சோதனையிட வேண்டும் என்றார். அதில் பெண்ணின் தனிப்பட்ட சில பொருட்கள் இருந்ததால், பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் அதை சோதனை செய்ய வேண்டும் என நமிதா கேட்டுகொண்டார். அத்துடன் வாதம் செய்து கோரிக்கையிட்டார். இதுதான் தற்போது நமிதா அதிகாரிகளிடம் வாதம் செய்தார் என தவறாக பகிரப்படுகிறது” என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com