மத்திய அரசை விமர்சிக்கும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ்

மத்திய அரசை விமர்சிக்கும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ்

மத்திய அரசை விமர்சிக்கும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ்
Published on

மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமான போக்கை க‌டைபிடிப்பதாக கூறப்படும் நிலையில், அதி‌முகவின் அதிகாரபூர்வ‌ நாளிதழான‌‌ டாக்டர்‌ நமது எம்.ஜி.ஆரில், மத்திய அரசை‌யும், பாஜகவையும் விமர்சித்து கவிதை பிரசுரிக்கப்பட்டுள்ளது.

உதய் திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு, சரக்கு மற்றும் சேவை வரிக்கு ஆதரவு, நீட் தேர்வு என மத்திய அரசின் திட்டங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டு நெருக்கடியில் நெளியவேண்டிய நிலை ஏற்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசிடம் கேட்டது எதுவும் கிடைக்கவில்லை என்றும், கெட்டது எதுவும் விலகவில்லை எனவும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.‌ வெங்கய்ய நாயுடு விடுகதை சொல்வதாகவும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதுக்கதை சொல்வதாகவும் அந்த கவிதையில் சாடப்பட்டுள்ளது. கழகங்களில்லா தமிழகம் எனக் கூறி கலர் கலரான கனவுகளில் காவிகள் துள்ளுவதாக பாரதிய ஜனதா மீது விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ள நிலையில் இன்று வெளியாகியுள்ள இந்த விமர்சனக் கவிதை அதிமுக அணிகளின் பூசலை உலகிற்கு படம்பிடித்துக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com