கூட்டுக்கு திரும்பும் பறவைகள்: ’நமது அம்மா’ தகவல்!

கூட்டுக்கு திரும்பும் பறவைகள்: ’நமது அம்மா’ தகவல்!

கூட்டுக்கு திரும்பும் பறவைகள்: ’நமது அம்மா’ தகவல்!
Published on

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள், அவர்களின் பாதை தவறு என்பதை உணர்ந்து மீண்டும் கட்சியை நோக்கி திரும்புவதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி வெளியாகியுள்ளது. 

'கூட்டுக்கு திரும்பும் பறவைகள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், சத்தியாவின் பிள்ளையும், சந்தியாவின் பிள்ளையும் கட்டிக்காத்த கழகத்தை விட்டு, கன்‌னக்கோல் கும்பல் பின்னே சென்றவர்கள், களங்கத்தை உணர்ந்து கழகத்தை நோக்கி அணிவகுக்க தொடங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அம்மாவால் துரத்தி அடிக்கப்பட்டவர்களை, தூக்கிப் பிடிக்க நினைத்தது துஷ்டக் காரியம் என்பதை உள்ளத்தால் உணர்ந்து, பாதை மாறிப்போன பாசப்பறவைகள் எல்லாம், பச்சிலையாம் ஈரிலை இயக்கம் நோக்கி, பழி துடைத்து திரும்புவாக கூறப்பட்டுள்ளது. துரோகக் கும்பலோடு, திரைமறைவு கூட்டு வைத்து இயக்கத்தை அழிக்க அலைகிறவரின் யோக்கியத்தை புரிந்து, எண்ணில்லா தொண்டர்கள் தன்னை உணர்ந்து தாய்க்கழகம் நோக்கி வருவதாக நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com