தமிழ்நாடு
நாமக்கல்: கூட்டுறவு வங்கியில் போலி நகைகளுக்கு கடன் வழங்கியதாக 3 பேர் சஸ்பெண்ட்
நாமக்கல்: கூட்டுறவு வங்கியில் போலி நகைகளுக்கு கடன் வழங்கியதாக 3 பேர் சஸ்பெண்ட்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கூட்டுறவு வங்கியில் போலி நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டது தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பீமாரப்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது உறவினருக்கு சொந்தமான வளையல்களை மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வைத்து கடன் பெற்றுள்ளார். இந்த நகை போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 14 வாடிக்கையாளர்களுக்கு, போலி நகைகளுக்கு 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கூட்டுறவு சங்கத்தில் எழுத்தர்களாக பணியாற்றிய சலோன்மணி, சிவலிங்கம், சுந்தரராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், மல்லசமுத்திரம் அதிமுக செயலாளருமான சுந்தரராஜன் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.