260 ஆடுகளை வெட்டி விருந்து படைத்து பக்தி பரவசத்துடன் நடந்த முனியப்பசாமி கோயில் திருவிழா.

260 ஆடுகளை வெட்டி விருந்து படைத்து பக்தி பரவசத்துடன் நடந்த முனியப்பசாமி கோயில் திருவிழா.

260 ஆடுகளை வெட்டி விருந்து படைத்து பக்தி பரவசத்துடன் நடந்த முனியப்பசாமி கோயில் திருவிழா.
Published on

நாமக்கல் மாவட்டம் அடுத்த சாணார்பாளையத்தில் அமைந்துள்ளது திருப்பதி முனியப்பசாமி கோயில். அங்கு ஆண்டுதோறும், மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டும் 47 அடி உயரமுள்ள முனியப்ப சாமிக்கு திருவிழா எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த விழாவில் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு அதிகாலை வரை சுமார் ‌260 ஆடுகள் வெட்டப்பட்டு, உணவு தயாரிக்கப்பட்டு முனியப்ப சாமிக்கு விருந்து படைக்கப்பட்டது.

அதன் பின்னர் அந்த உணவு மக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. பக்தி பரவசத்துடன் விழாவிற்கு வந்த மக்கள் அன்னதானத்தில் பங்கேற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து இன்றும் முனியப்பசாமிக்கு நாட்டுக்கோழி விருந்தும் படைக்கும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற இருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com