நாமக்கல்: 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி.. பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பு இடைவெளியின் போது 6 ஆம் வகுப்பு பயிலும் 11 வயது மாணவி மயங்கி விழுந்த நிலையில், பள்ளி ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் உடற் கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com