காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய அமைச்சர் மதிவேந்தன்pt desk
தமிழ்நாடு
நாமக்கல் | சாலை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய அமைச்சர் மதிவேந்தன்
ராசிபுரம் அருகே விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்
செய்தியாளர்: எம்.துரைசாமி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு பணிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். இதையடுத்து நிகழ்ச்சிகளை முடித்து விட்டு முள்ளுகுறிச்சி கல்லாத்து காடு பகுதியில் சென்றுள்ளார்.
அப்போது மெட்டாலா அருகே 2 இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது. இதனை கண்ட அமைச்சர் மதிவேந்தன், காரிலிருந்து இறங்கி காயமடைந்தவர்களை மீட்டு வேறு வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அரசு மருத்துவர்களிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர், தீவிர சிகிச்சை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.