நாமக்கல்: முட்டை விலை கிடு கிடு உயர்வு – மேலும் உயரும் என தகவல்

நாமக்கல்: முட்டை விலை கிடு கிடு உயர்வு – மேலும் உயரும் என தகவல்
நாமக்கல்: முட்டை விலை கிடு கிடு உயர்வு – மேலும் உயரும் என தகவல்

நாமக்கல் மண்டலத்தில் ஜெட் வேகத்தில் உயரும் முட்டை விலை, 7 நாட்களில் 90 காசுகள் விலை உயர்ந்துள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 15 காசுகளில் இருந்து ஒரேநாளில் 35 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 9-ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 60 காசுகளாக இருந்த நிலையில், கடந்த 9-ம் தேதி 5 காசுகளும், 12-ம் தேதி 25 காசுகளும், 14-ம் தேதி 25 காசுகளும் உயர்ந்து 4 ரூபாய் 15 காசுகளாக விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் மீண்டும் 35 காசுகள் பண்ணை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 7 நாட்களில் 90 காசுகள் விலை உயர்ந்துள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com