நாமக்கல்: தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பேரூராட்சித் தலைவர் என்ன செய்தார் தெரியுமா?

நாமக்கல்: தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பேரூராட்சித் தலைவர் என்ன செய்தார் தெரியுமா?
நாமக்கல்: தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பேரூராட்சித் தலைவர் என்ன செய்தார் தெரியுமா?

நாமக்கல் அருகே தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஊர் மக்களுக்கு தடபுடலாக பேரூராட்சி தலைவர் கறிவிருந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பொத்தனூர் பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளில் திமுகவும் 5 வார்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற மறைமுக தேர்தலில் பேரூராட்சியின் தலைவராக திமுகவைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், பேரூராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி, வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக 400 கிலோ கோழி 200 கிலோ ஆட்டு இறைச்சி ஆகியவை கொண்டு தடபுடலாக சமைத்து தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்களுக்கு கறி விருந்து வைத்தார். இந்த கறிவிருந்தில் அப்பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அசைவ விருந்தை உண்டு மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com