தமிழ்நாடு
நாமக்கல்: நடிகர் விவேக் படத்திற்கு அஞ்சலி செலுத்திய நாடக நடிகர்கள்!
நாமக்கல்: நடிகர் விவேக் படத்திற்கு அஞ்சலி செலுத்திய நாடக நடிகர்கள்!
நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தின் சார்பில் மறைந்த நடிகர் விவேக்கின் உருவ படத்திற்கு நாடக நடிகர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
திரைப்பட நடிகரும், சமூக சேவகருமான விவேக் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாமக்கல் மணிக்கூண்டு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாடக நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

