அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்புதியதலைமுறை

நாமக்கல்| இனி அப்படி பெயர் வேண்டாம்.. களத்தில் இறங்கி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்த அதிரடி செயல்!

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஊராட்சி பள்ளியின் பெயரை அமைச்சர் அன்பில் மகேஷ் மாற்றி இருக்கிறர்.
Published on

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஊராட்சி பள்ளியின் பெயரை அமைச்சர் அன்பில் மகேஷ் மாற்றி இருக்கிறர். பள்ளியின் பெயர் பலகையில் இருந்த அரிஜன் காலணி என்ற பெயரை, கருப்பு மைக்கொண்டு தானே அழித்தார். இனி மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக அது விளங்கும் என்றார்.

முன்னதாக அப்பகுதி மக்கள் இப்பள்ளியின் பெயரை மாற்றவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தநிலையில், திடீரென்று அப்பள்ளிக்கு வந்த பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் தானே கருப்பு மைக்கொண்டு அரிசன் காலணி என்ற பெயரை அழித்ததுடன் அரசாணை வெளியிட்டு வழங்கினார். இச்சம்பவத்திற்கு அப்பகுதி மக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து தனது சமூகவலைதளத்தில் கருத்தை பதிவுசெய்த அமைச்சர்,

’கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ - மு.க என்று அவர் தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com