\
நாமக்கல்: நண்பர்களுடன் ஊர் கிணற்றில் கயிறு கட்டி குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாமக்கல்: நண்பர்களுடன் ஊர் கிணற்றில் கயிறு கட்டி குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாமக்கல்: நண்பர்களுடன் ஊர் கிணற்றில் கயிறு கட்டி குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Published on

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள தொட்டி பாளையத்தில் உள்ள ஊர் கிணற்றில் நண்பர்களுடன் குளித்து விளையாடி கொண்டிருந்த மாணவன் உயிரிழந்தார். உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள கிழக்கு தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. கூலித்தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்களும், 10ம் வகுப்பு படிக்கும் தரனீஷ் என்கிற மகனும் உள்ளார்.

இந்நிலையில் இன்று ஊர் கிணற்றின் அருகே நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த தரனீஷ், தனக்கு நீச்சல் தெரியாத நிலையில் கிணற்றில் கயிறு கட்டி தண்ணீரில் குளித்து கொண்டிருந்தான். அப்போது திடீரென கயிற்றை விட்ட தரனீஷ் 70அடி ஆழ தண்ணீரில் மூழ்கினான்.

இதை பார்த்து அவரது நண்பர்கள் கூச்சலிட்டதை அடுத்து கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செங்கோடு தீயனைப்பு வீரர்கள் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மாணவன் தர்னீஷை மீட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com