நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை சரிவு - ஒரே நாளில் 10 காசுகள் குறைவு

நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை சரிவு - ஒரே நாளில் 10 காசுகள் குறைவு
நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை சரிவு - ஒரே நாளில் 10 காசுகள் குறைவு

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளில் இருந்து 10 காசுகள் குறைத்து 4 ரூபாய் 50 காசுகளாக  விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இதில், தினசரி 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல் மண்டலத்தில் வாரத்தில் 3 நாட்களுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலமாக முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த மாதம் 9-ம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 9 நாட்களாக விலையில் மாற்றம் இன்றி நீடித்து வந்த நிலையில், இன்று முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 10 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை சரிவு குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும் போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறையால் முட்டை விற்பனை குறைந்துள்ளது. அதே போல் பிற மண்டலங்களில் முட்டை விற்பனை குறைந்தாகவும் இதனால் அதிகளவு முட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறைத்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கொள்முதல் விலையை குறைத்துள்ளதாகவும், இவ்விலை வரும் நாட்களில் மேலும் சற்று குறையவே வாய்ப்புள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com