சாகும் வரை உண்ணாவிரதம்: அனுமதி கோரி நளினி மனு

சாகும் வரை உண்ணாவிரதம்: அனுமதி கோரி நளினி மனு

சாகும் வரை உண்ணாவிரதம்: அனுமதி கோரி நளினி மனு
Published on

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி நளினி, சாகும்வரை உண்ணாவிரம் இருக்க அனுமதி கோரி சிறைத்துறை அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.

கடந்த 26 ஆண்டுகள் சிறையில் உள்ள தனக்கு தனது மகள் திருமணத்திற்காக பரோல் கேட்டும் இதுவரை வழங்கப்படவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், தனது கணவர் முருகன் ஜீவசமாதி அடைவதாகக் கூறி, உண்ணாவிரதம் இருக்கும் நிலையில், தனக்கும் அனுமதி வழங்க அதில் கோரிக்கை விடுத்துள்ளார். மனு அளிக்கும் முன்பே அவர் நேற்று முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளியான பேரறிவாளனுக்கு, அவரது தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒரு மாத கால பரோல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com