‘நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் தொடங்கிவைப்பு!
‘நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் தொடங்கிவைப்பு!puthiyathalaimurai

‘கல்வியும், சுகாதாரமும் நம் அரசின் இரு கண்கள்' - ’நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் தொடங்கிவைப்பு!

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ‘ நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமகள் நடத்தப்படவுள்ளன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இந்த முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
Published on

‘நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம்களை சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 முதல் மாலை 4 வரை முகாம்கள் நடக்க இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ‘ நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமகள் நடத்தப்படவுள்ளன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இந்த முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், இருதய நோய்கள், மனநலன் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருமே இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணையும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 15 மண்டலங்களில் முகாம்கள் நடைபெறும். முகாம் நடக்கும் இடத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கூடிய நோய் கண்டறியும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

‘நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் தொடங்கிவைப்பு!
“சாதி சங்கங்கள் இருக்கு, சாதி மேட்ரிமோனியல் இருக்கு.. அப்ப எப்படி சாதி ஒழியும்” - புனிதப் பாண்டியன்

பரிசோதனை கூடம் அங்கேயே அமைக்கப்பட்டு பிற்பகலுக்குள் வாட்ஸ்ஆப் மூலம் சோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். தேவைப்படுவோரை தொடர் சிகிச்சைக்குள் கொண்டு செல்லப்படுவார்கள். ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள், தொழிலாளர் ஆகியோரை பங்கேற்கச் செய்ய அந்தந்த துறைகள் நடவடிக்கை மேற்கொள்கின்றன.

இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மருத்துவமனையில் இருந்தாலும் மக்கள் பணியாற்றுவதே என் விருப்பம். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது. கொரோனா காலத்தில் அனைத்து அமைச்சர்களும் சுகாதார அமைச்சர்களாக மாறினோம். கல்வியும் , மருத்துவமனையில் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள். கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அதில் ஒருவர் கூட விடுபட்டுவிடக் கூடாது.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 1256 முகாம்கள் நடைபெற உள்ளன. கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும். உடல்நலமாக இருந்தால்தான் மகிழ்ச்சியாக வாழ முடியும். மருத்துவமனைகளை நாடுவோர் நோயாளிகள் அல்ல; மருத்துவப்பயனாளிகள். முகாம்களுக்கு வருவோரை கனிவோடு பணிவோடும் நடத்த வேண்டும். தமிழ்நாடுதான் எதிலும் எப்போதும் நம்பர் ஒன். ” என்று பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com