
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான சட்டப்பேரவை விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசியபோது, "பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் போல நானும் முதல்வரும்" என்று கூறினார்.
பேரவையில் கொடுக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்துள்ளார் நயினார் நாகேந்திரன். அதனால், சபாநாயகர் அவரிடம் ‘உரையை நிறைவு செய்யுங்கள்’ என்று சொன்னார்.
அப்போது, முதல்வருடனான நட்பு பற்றி பேசியவர், "பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் போல நானும் முதல்வரும்" என்று கூறி, "எனக்கு கூடுதல் நேரம் வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.