போலீஸா இல்ல.... சாலையில் தடுப்பு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நபரிடம் கடுமையாக நடந்து கொண்ட எஸ்ஐ

நாகையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்பு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நபரை கடுமையாக தாக்கிய போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது.
Police SI
Police SIpt desk

தமிழக காரைக்கால் எல்லையான நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் (திருமருகல் சாலை பகுதியில்) சாராய கடத்தலை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு சாலைகளில் இரண்டு சாலைகளை ஒருவழி பாதையாக மாற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கனரக வாகனங்களை வளைக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

barricade
barricadept desk

மேலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததால் கும்பகோணத்தில் இருந்து நாகை நோக்கி வந்த இரண்டு அரசு பேருந்துகள் பயணிகளுடன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவ்வழியே சென்ற உள்ளூர் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சிலர், தடுப்புகளை அகற்றி அரசு பேருந்து எளிமையாக செல்ல வழிவகை செய்ய வேண்டுமென கேட்டு நேற்று இரவு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து தடுப்புகள் அகற்றப்பட்டு பேருந்துகள் செல்ல வழிவகை செய்யப்பட்டது.

Govt Bus
Govt Buspt desk

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற நாகூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிவேல் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை கடுமையாக தாக்கி ஒருமையில் பேசினார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் பழனிவேல், போராட்டம் நடத்திய நபரை காவல் வாகனத்தில் ஏற்றி தனது பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்து அடாவடியில் ஈடுபட்டார். இதையடுத்து காவல் வாகனத்தில் அவரை ஏற்றிய பிறகும் வாகனத்தின் உள்ளே இருந்த சக காவலர்கள் தொடர்ந்து தாக்கியபடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com