\
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு நக்மா நேரில் ஆதரவு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு நக்மா நேரில் ஆதரவு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு நக்மா நேரில் ஆதரவு
Published on: 

மகளிர் காங்கிரஸ் தலைவர் நக்மா டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகளைக் காக்க மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது எனக் கூறிய நக்மா, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்ததாக தெரியவில்லை என குற்றம்சாட்டினார். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்க கூட இந்த அரசு தயாராக இல்லை எனக் கூறிய அவர், விவசாயிகளின் பிரச்னைகளை முக்கியமான விவகாரமாக மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com