\
யாருக்கு ஆதரவு?: தொகுதி மக்களிடம் கருத்து கேட்கும் எம்எல்ஏ

யாருக்கு ஆதரவு?: தொகுதி மக்களிடம் கருத்து கேட்கும் எம்எல்ஏ

யாருக்கு ஆதரவு?: தொகுதி மக்களிடம் கருத்து கேட்கும் எம்எல்ஏ
Published on: 

அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் கூட்டணியில் போட்டியிட்ட மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தான் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என 2ஆவது நாளாக மக்களிடம் கருத்து கேட்டு வருகிறார்.

நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏவான தமிமீன் அன்சாரி, தனது சட்டமன்ற அலுவலகத்திற்கு வெளியே இதற்காக வாக்குப் பெட்டி ஒன்றினை வைத்துள்ளார். மேலும், இதுதொடர்பாக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்தும் அவர் கருத்து கேட்டு வருகிறார். பொதுமக்களின் கருத்தை கேட்ட பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதா அல்லது சசிகலாவை ஆதரிப்பதா என்பது குறித்து அவர் முடிவெடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com