பொதுப்பணித்துறையினர் அலட்சியம்: மழை நீரில் மூழ்கிய பயிர்கள்

பொதுப்பணித்துறையினர் அலட்சியம்: மழை நீரில் மூழ்கிய பயிர்கள்

பொதுப்பணித்துறையினர் அலட்சியம்: மழை நீரில் மூழ்கிய பயிர்கள்
Published on

பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் மயிலாடுதுறை அருகே 2000 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட பயிர் மழைநீரில் மூழ்கியது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் நிலத்தடி நீரைக்கொண்டுதான் குறுவை, தாளடி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு வக்காரமாரி, முடிகண்டநல்லூர், வல்லம், அகரமணல்மேடு, இலுப்பப்பட்டு, பாப்பாக்குடி போன்ற பகுதிக்கு வடிகால் ஆறாக இருப்பது ராஜன் வாய்க்கால். இந்த வாய்க்காலை பொதுப்பணித்துறையினர் தூர் வாராதததால் ஆற்றில் புதர் மண்டிக்கிடக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் ஒன்றுதிரண்டு பொதுப்பணித்துறையினரிடம் ராஜன் வாய்க்கால் ஆற்றை தூர்வார மனு அளித்துள்ளார். தூர்வாரும் பணியை மேற்கொண்ட பொதுப்பணித்துறையினர் 100 மீட்டர் தூரம் வரை மட்டுமே தூர்வாரிவிட்டு கிடப்பில் போட்டனர்.

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மாநிலம் முழுவதும் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பெய்த மழை நீர் 2000 ஏக்கர் நிலத்தில் தேங்கியது. நாற்று நட்டு 20 தினங்களே ஆன நிலையில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. வடிகால் வாய்க்காலான ஊசிவாய்க்கால் நிரம்பி வழிவதால் வயல்பகுதியில் உள்ள தண்ணீர் வடியாமல் உள்ளது. ராஜன் வாய்க்காலைமுறையாக தூர்வாரியிருந்தால் 2 ஆயிரம் ஏக்கரில் தேங்கியிருக்கும் மழைநீர் வடிந்திருக்கும் என்றும் பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com