கடல் சீற்றம்: மீன் பிடி தொழில் முடக்கம்

கடல் சீற்றம்: மீன் பிடி தொழில் முடக்கம்

கடல் சீற்றம்: மீன் பிடி தொழில் முடக்கம்
Published on

வேதாரண்யத்தில் கடல் சீற்றத்துடன் பலத்தக் காற்று வீசிவருவதால் மூன்றாவது நாளாக கோடியக்கரை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுவதால் மூன்றாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வில்லை. வங்க கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடல் சீற்றத்துடன் பலத்தக் காற்றும் வீசி வருகிறது. இதனால் கோடியக்கரையைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உள்ளனர். மீன்பிடி தொழில் முடங்கியதால் நாள் ஒன்றுக்கு ரூ 10 லட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com