\
தமிழகம் திரும்பினார் மலேசியா‌வில் தவித்த நாகை இளை‌ஞ‌ர் 

தமிழகம் திரும்பினார் மலேசியா‌வில் தவித்த நாகை இளை‌ஞ‌ர் 

தமிழகம் திரும்பினார் மலேசியா‌வில் தவித்த நாகை இளை‌ஞ‌ர் 
Published on: 

மலேசியாவில் பணியிடத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார், புதியதலைமுறை செய்தி எதிரொலியாக தமிழகம் திரும்பினார்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார், கடந்த மாதம் 12 ஆம் தேதி மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். உறுதியளித்தபடி உரிய பணிகளை வழங்காமல், வேறு வேலைகளை கொடுத்து துன்புறுத்துவதாகவும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஊருக்குத் திரும்ப அனுமதி அளிக்கவில்லை என்றும் அவர் ஆடியோ வெளியிட்டிருந்தார். 

தன்னை மீட்டுச்செல்ல இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும்படி இளைஞர் நந்தகுமார் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பான ‌செய்தி புதிய தலைமுறையில் ஒளிபரப்பப்பட்டது. இதன் எதிரொலியாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் தமது ட்விட்டர் பக்கத்தில் புதிய தலைமுறையின் ஆன்லைன் ட்விட்டரை டேக் செய்து நந்தகுமார் இந்தியாவுக்கு அழைத்துவரப்படுவார் என பதிவிட்டிருந்தார். அதன்படி நேற்று மலேசியாவில் இருந்து விமானத்தின் மூலம் திருச்சி திரும்பிய நந்தகுமார் பாதுகாப்பு கருதி திருப்பூரில் இருக்கும் தனது சகோதரி வீட்டில் இருக்கிறார்.

‌

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com