சாராயம் குடித்த இளைஞர் உயிரிழப்பு

சாராயம் குடித்த இளைஞர் உயிரிழப்பு

சாராயம் குடித்த இளைஞர் உயிரிழப்பு
Published on

நாகை மாவட்டம் சீர்காழி அருகே சாராயம் குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கோயில்பத்து பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார். இவர், குமார் என்றவர் விற்ற சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளார். பின்னர் வீட்டிற்குச் சென்ற முத்துக்குமார், சிறிது நேரத்திலேயே வயிற்று வலி ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் சாராயம் விற்ற குமார் என்பவரின் வீட்டையும் அடித்து நொறுக்கினர். மேலும் இறந்தவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com