கைக்குழந்தையுடன் விபத்தில் சிக்கிய பெண்.. தக்க நேரத்தில் உதவிய நாகை மாவட்ட கண்காணிப்பாளார்!

தக்கநேரத்தில் உதவி செய்த நாகை மாவட்ட கண்காணிப்பாளார் ஹர்சிங் காவலருக்கு பாராட்டு

நாகையில் கைக்குழந்தையுடன் விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு தனது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார், காவல்துறை கண்காணிப்பாளரான ஹர்சிங்.

நாகை மாவட்டம் கீழ்வேலூர் குருகத்தியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடனும், மாமியாருடனும் ஆட்டோவில் பயணித்துள்ளார். புத்தூர் ரவுண்டானா அருகில் ஆட்டோ சென்ற பொழுது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் எதிபாராதவிதமாக ஆட்டோவில் மோதியது. இதில் ஆட்டோ விபத்துக்குள்ளானது.

ஆட்டோவில் பயணித்த மூவரையும் காவல் துறையினர் மீட்டு அவர்களை முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்ப முயன்ற பொழுது அவ்வழியாக வந்த நாகை மாவட்ட கண்காணிப்பாளார் ஹர்சிங் காவலர் ரோந்து வாகனத்தில் அவர்களை மருத்துவமனை அனுப்பி வைத்தார். இச்செயலை கண்டு பொதுமக்கள் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com