நாகையில் 1500 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின
வேதாரண்யத்தில் கனமழையால் சுமார் 1,500 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் மழைநீரீல் முழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்காவில் கடந்த ஐந்து தினங்களாக மழை பெய்து வருகிறது. இதில் தலைஞாயிறு பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் காலை 8 மணி நிலவரப்படி 27 செ.மீ மழை மழை பெய்துள்ளது. இதனால் தலைஞாயிறு முதல்சேத்தி, இரண்டாம் சேத்தி, சந்தானதெரு, கேசவன்ஓடை, அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கரில் நேரடி நெல்விதைப்பு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழைநீரீல் முழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அரிச்சந்திரா நதியில் கடல் முகத்துவரத்தில் தண்ணீர் வடிய தடுப்புகளையும், மண் மேடுகளை அகற்றியபோதும் ஆற்றில் தண்ணீர் எதிர்த்து வருவதால் மேலும் பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.