மீனவர்கள் இடையே மோதல்
மீனவர்கள் இடையே மோதல்pt desk

நாகை: நடுக்கடலில் மீனவர்கள் இடையே மோதல் - வலைகளை அறுக்கப்பட்டதாக ஒருதரப்பினர் புகார்

நாகை அருகே நடுக்கடலில் மீனவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Published on

செய்தியாளர்: பக்கிரிதாஸ்

செருதூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட பைபர் படகில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் 3 பைபர் படகுகள் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, 2 விசைப்படகுகளில் வந்த அக்கரைப்பேட்டை மீனவர்கள், பைபர் படகு மீனவர்களின் வலையை அறுத்துவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.

மீனவர்கள் இடையே மோதல்
மீனவர்கள் இடையே மோதல்pt desk

இது தொடர்பாக கேள்வி எழுப்பியதும், ஒரு தரப்பினர் பைபர் படகுகளை விசைப்படகில் கட்டி இழுத்துச் சென்றதாகவும், பின்னர் அங்கிருந்தவர்களை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மீனவர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

மீனவர்கள் இடையே மோதல்
திருப்பூர்: உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த மேலும் 3 வங்கதேச இளைஞர்கள் கைது

பின்னர், தாக்குதலில் காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு, ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கடற்கரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com