நாகை: தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து நாசமானது... நகை மற்றும் பணம் எரிந்து சேதம்

நாகை: தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து நாசமானது... நகை மற்றும் பணம் எரிந்து சேதம்

நாகை: தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து நாசமானது... நகை மற்றும் பணம் எரிந்து சேதம்
Published on

நாகையில் 7 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த வீட்டு உபயோக பொருட்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவை எரிந்து நாசமானது.

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். ஆட்டோ ஓட்டுநரான இவர், இன்று காலை வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இவரது வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென அவரது வீடு தீப்பற்றி எரிந்தது.


இதைத்தொடர்ந்து தீ மளமளவென அருகிலிருந்த வீடுகளுக்கு பரவியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் காற்றின் வேகத்தில் 7 வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமானது.

இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் தினேஷ்குமார் திருமணத்திற்காக வைத்திருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் முற்றிலும் தீயில் கருகியது.

இதேபோல் மாலதி, மாரிமுத்து, ஈஸ்வரன் ஆகியோரின் வீட்டில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் கட்டில் பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com