50 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
50 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளைpt desk

நாகை: நகைக் கடையின் பூட்டை உடைத்து 50 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

வேதாரண்யம் அருகே நகைக் கடையின் பூட்டை உடைத்து 50 கிலோ வெள்ளிப் பொருட்கள் 6 சவரன் தங்க ஆபரணங்களை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: சி.பக்கிரிதாஸ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மணக்குடி கடைத்தெருவில் கணேசன் என்பவர் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு நகைக் கடையை பூட்டி விட்டுச் சென்ற கணேசன், இன்று காலையில் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கடைக்குள் சென்று பார்த்துள்ளார்.

நகைக் கடை
நகைக் கடைpt desk

அப்போது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ வெள்ளிக் கொலுசு மற்றும் வெள்ளி பொருட்கள். 6 சவரன் தங்க ஆபரணங்களையும் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கணேசன் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தலைஞாயிறு காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

50 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் - நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

தங்க, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தடய அறிவியல் நிபுணர்களைக் கொண்டு கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com