\
கொட்டும் மழையில் போராடிய மீனவக் குடும்பங்கள்

கொட்டும் மழையில் போராடிய மீனவக் குடும்பங்கள்

கொட்டும் மழையில் போராடிய மீனவக் குடும்பங்கள்
Published on

வேதாரண்யத்தில் உரக்கிடங்கு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக, 3 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பில் நுண்ணிய உரக்கிடங்கு மையம் அமைக்கும் பணி கடந்த 15‌ நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் எனக்கூறி ஆறுகாட்டுத்துறை மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மீனவர்களின் தொடர் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், உரக்கிடங்கு அமையவுள்ள இடத்திற்கு அருகே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com