\
நாகை: மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு - மீனவர் படுகாயம்

நாகை: மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு - மீனவர் படுகாயம்

நாகை: மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு - மீனவர் படுகாயம்
Published on

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.

இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் கலைச்செல்வன் என்ற மீனவரின் தலையில் குண்டுபாய்ந்துள்ளது. அவர் ஆபத்தான நிலையில் நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டையடுத்து, விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 மீனவர்கள் கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com