சுற்றுச்சூழல் தாக்க வரைவுக்கு எதிர்ப்பு: பதாகை ஏந்தி நாம்தமிழர் கட்சியினர் போராட்டம்

சுற்றுச்சூழல் தாக்க வரைவுக்கு எதிர்ப்பு: பதாகை ஏந்தி நாம்தமிழர் கட்சியினர் போராட்டம்
சுற்றுச்சூழல் தாக்க வரைவுக்கு எதிர்ப்பு: பதாகை ஏந்தி நாம்தமிழர் கட்சியினர் போராட்டம்

 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 -ஐ திரும்பப்பெறக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக, தமிழகம் முழுவதும் கைகளில் பதாகை ஏந்தி இன்று  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை திரும்ப பெறுவதற்காக நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் அனைவரும் கைகளில் பதாகை ஏந்தி இணைய வழியிலான போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியினர், சூழலியல் ஆர்வலர்கள் பலரும் கைகளில் பதாகைகள் ஏந்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக சீமான் “ நடுவண் அரசே, நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக்கூடிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை திரும்ப பெறு” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com