“கர்நாடக முதல்வரை கமல் சந்தித்தது ஏற்புடையது அல்ல” - சீமானின் கருத்து

“கர்நாடக முதல்வரை கமல் சந்தித்தது ஏற்புடையது அல்ல” - சீமானின் கருத்து

“கர்நாடக முதல்வரை கமல் சந்தித்தது ஏற்புடையது அல்ல” - சீமானின் கருத்து
Published on

கர்நாடக முதலவர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தது ஏற்புடையதல்ல என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகனை நேரில் சந்தித்து சீமான் நலம் விசாரித்தார். அப்போது சிறை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னை கைது செய்ததற்காக வந்த போலீஸ் வேல்முருகனை கைது செய்துள்ளது. தேசத்திற்கு நாங்கள் துரோகம் செய்யவில்லை, தேசம்தான் எங்களுக்கு துரோகம் செய்கிறது. 8 வழி சாலைக்காக பேசிய என் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாக தலையிடுகிறது. போராடக்கூடாது என்பது ஆபத்தான அதிகாரம்” என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “எதையும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது என்பது ஜனநாயக விரோதம். நீட் தேர்வில் முறையான கேள்விகள் கேட்கப்படவில்லை. 90% அச்சுப்பிழைகள் இருந்தது. நீட் ஒரு இனத்தின் மீது தொடுக்கப்பட்ட அழிப்பு போர். நீட் தேர்வு என்பது சமூக கொடுமை. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களா பாடம் நடத்துவார்கள்?. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரையில் எஸ்.வி சேகர் கைது செய்யப்படவில்லை. கர்நாடக முதல்வரை கமல் சந்தித்தது ஏற்புடையது அல்ல” என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com