“என்னை நீக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை”- சீமானுக்கு எதிராக களமிறங்கிய நாம் தமிழர் நிர்வாகி!

“உங்களை கட்சியை விட்டு நீக்கறேன் - என்னைக் கட்சியை விட்டு நீக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
வெற்றிக்குமரன் - சீமான்
வெற்றிக்குமரன் - சீமான்PT
Summary

நாம் தமிழர் கட்சியின் மதுரை மண்டலத்தின் முக்கிய முகமாக பார்க்கப்படும் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரனை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

சீமான் வெளியிட்டிருந்த அந்த அறிக்கையில், “மதுரை மேற்கு தொகுதியைச் சேர்ந்த செ.வெற்றிக்குமரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துறையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் இதற்கு பிறகு அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது” என்று கூறுப்பட்டிருந்தது.

என்னை நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை!

Summary

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை அதிரடியாக நீக்கப்பட்டதற்கு தற்போது பதில் அறிக்கை வெளியிட்டிருக்கும் வெற்றிக்குமரன், என்னை நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என கூறியுள்ளார்.

கட்சி தொடங்கியது முதல் தான் எவ்வாறு நாம் தமிழர் கட்சியோடு ஒருங்கிணைந்து இருக்கிறேன் என்பதை தெரிவித்திருக்கும் வெற்றிக்குமரன், “என் மீதான ஒழுங்கு நடவடிக்கை என்ன? ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தவர்கள் யார்? அவர்கள் என்ன உங்களிடம் சமர்ப்பித்தார்கள்? என பல கேள்விகளை எழுப்பியதோடு, ஏன் என் அழைப்பை 6 மாத காலங்களாக தடை செய்துள்ளீர்கள்” என கூறியுள்ளார்.

மேலும் “நாம் தமிழர் கட்சியின் விதிமுறைகளின் படி, மாநில பொறுப்பில் இருக்கும் என்னை நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவை கூட்டித்தான் என்னை நீக்க முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், அக்கட்சியின் நிர்வாகிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com