"என்னிடம் அதிகாரம் இருந்தால் அரைமணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை அடக்கிக் காட்டுவேன்” - சீமான்

”கேரளாவில் அதிக கனிம வளங்கள் இருந்தால் அதை அம்மாநில அரசு காப்பாற்றும். ஆனால் தமிழகத்தில் குவாரி முதலாளிகளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு தமிழக அரசு கனிம வளங்களை எடுக்க அனுமதி அளிக்கும்” என்று சீமான் விமர்சித்துள்ளார்.
சீமான்
சீமான்PT

போடியில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளார்களை சந்திதார்.

தேனி மாவட்டம் போடியில் உள்ள ஒரு தனியார் அரங்கில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போடியில் உள்ள திருவள்ளுவர் சிலை, தேவர் சிலை, வ.உ.சி சிலை, காமராஜர் சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்பு வ.உ.சி சிலை அருகே உள்ள நாம் தமிழர் கட்சியின் கொடியை ஏற்றி வைத்த சீமான் கொடி மரியாதையும் செலுத்தினார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சீமான் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் பேசியதன் விவரம்:

1. மத்திய அரசு கொண்டுவரும் பொது சிவில் சட்டம் குறித்த கேள்விக்கு..

சுதந்திரம் பெற்று இந்திய நாடு 75 ஆண்டுகள் ஆகி விட்டது. இதில் மக்களுக்கு ஒரே சுடுகாடு உள்ளதா? ஒரே கோவில் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி அந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்‌.

2. மணிப்பூர் கலவரம் பற்றிய கேள்விக்கு..

அன்று இலங்கையில் படுகொலை நடந்தது, நேற்று காஷ்மீரில் நடந்தது போன்று இன்று மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை., கலவரத்தை உண்டாக்குவதே மத்திய அரசு தான். என்னிடம் அதிகாரம் இருந்தால் அரைமணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை அடக்கிக் காட்டுவேன்.

3. தேனி மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் பிளாட்டுகளாக உருவாகியுள்ளதை பற்றிய கேள்விக்கு..

”இச்செயலால் தமிழகம் ஆபத்தை எதிர் நோக்கி கொண்டு சென்றுள்ளது. விவசாய விளைநிலங்கள் விற்பனைக்கு அல்ல என முடிவெடுக்க வேண்டும். இந்த நிலை நீடித்தால் உணவுக்கு பஞ்சம் ஏற்படும். தற்பொழுது ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய் விற்று வரும் நிலையில் வருங்காலத்தில் நிலை என்ன ஆகும்” என்று பேசினார்.

4. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியான தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வது குறித்த கேள்விக்கு..

கேரளாவில் அதிக கனிம வளங்கள் இருந்தால் அதை அம்மாநில அரசு காப்பாற்றும். ஆனால், தமிழகத்தில் குவாரி முதலாளிகளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு தமிழக அரசு கனிம வளங்களை எடுக்க அனுமதி அளிக்கும். இங்கு அதிகாரிகள் கைக்கூலிகளாக இருக்கிறார்கள்.

5. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் மின்தடை ஏற்படுவது குறித்த கேள்விக்கு..

நேற்று நான் தங்கி இருந்த அறையில் கூட 15 முறைக்கு மேல் மின் தடை ஏற்பட்டது. இதைவிட கொடுமை என்ன என்றால் எனது தாய் குடியிருக்கும் சிறிய வீட்டில் ஒரு மின்விசிறி உபயோகிக்கும் நிலையில், 8000 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. அதற்கு முன்பு 500 ரூபாய் தான் மின்கட்டணம் வரும். தமிழகத்தில் தற்பொழுது மின் கட்டண உயர்வு தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது. மின்தடையும் தொடர்ந்து நிலவி வருவது இந்த ஆட்சியின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. வெளியில் இருந்து மின்சாரத்தை விலை கொடுத்து ஆட்சியாளர்கள் வாங்குகிறார்களே தவிர மின் உற்பத்தியை பெருக்குவதில் அக்கறை இல்லாமல் இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com